FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புடாபெஸ்ட் ஓபனில் தமிழக ஸ்குவாஷ் வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன்!

தமிழக ஸ்குவாஷ் வீரர் வேலவன் செந்தில்குமார் முதல்முறையாக பிஎஸ்ஏ காப்பர் அளவிலான ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறித்து...

9 வினாடிகள் முன்பு
புடாபெஸ்ட் ஓபனில் கோப்பையுடன் வேலவன் செந்தில்குமார். - படம்: எக்ஸ் / ஆல் இந்தியா ரேடியோ நியூஸ்.
பகிர்:

தமிழக ஸ்குவாஷ் வீரர் வேலவன் செந்தில்குமார் (26 வயது) முதல்முறையாக பிஎஸ்ஏ காப்பர் அளவிலான ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் ஹங்கேரியின் தலைநகரில் நடந்த புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப் போட்டியில் சொந்த மண்ணின் வீரர் பாலாஸ் ஃபர்காஸ் உடன் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் மோதினார். இதில் 11-4, 11-2, 11-3 என்ற புள்ளிகளில் வேலவன் செந்தில்குமார் அபார வெற்றி பெற்றார்.

Advertisement

Advertisement

இந்த வெற்றியின் மூலமாக அவருக்கு 43,500 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 41.50 லட்சம் கிடைத்துள்ளது. இது அவரது 11ஆவது பிஎஸ்ஏ டூர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 ஸ்குவாஷ் கலப்பு அணியில் சாம்பியன்ஷிப் பெற்ற அணியிலும் வேலவன் செந்தில்குமார் பங்கேற்றிருந்தார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பிலும் வேலவன் செந்தில்குமார் இரண்டு முறை தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Tamilnadu player Velavan Senthilkumar wins Budapest Open squash

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments