காமன்வெல்த்: பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த சஞ்சனா!
காமன்வெல்த் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்சனாவின் தோல்வி குறித்து...
காமன்வெல்த் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்சனா தனக்குக் கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் 94 கிலோ பளுவைத் தூக்காமல் போட்டியிலிருந்து வெளியேறினார்.
பளுதூக்குதலில் பதக்கம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்நாட்ச் பிரிவிலேயே அவர் வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 தொடங்கின. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க, இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மகளிருக்கான 77 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சஞ்சனா கலந்துகொண்டார்.
19 வயதான சஞ்சனா ஸ்நாட்ச் பிரிவில் 94 கிலோ எடையை தனக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் தூக்க முடியாமல் க்ளீன் & ஜெர்க் பிரிவுக்குச் செல்லாமலேயே வெளியேறினார்.
இந்தப் பிரிவில் இது இரண்டாவது முறையாக டிஎன்எஃப் (டிட் நாட் ஃபினிஷ்) ஆக இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். சஞ்சனாவுக்கு முன்னதாக நிரூபமா தேவி 63 கிலோ எடைப் பிரிவில் 93 கிலோ பளுவைத் தூக்க முடியாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Sanjana crashes out after failing all three snatch attempts in women's 77kg
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.