கால்பந்து உலகக் கோப்பை: 96 ஆண்டுகால வரலாற்றில் 8 அணிகள் மட்டுமே சாம்பியன்!
96 ஆண்டுகால கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை சாம்பியனான நாடுகள் குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையின் 96 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்தாண்டு உலகக் கோப்பைக்கு எட்டு நாள்கள் மட்டுமே இருப்பதால் இதனை ஒப்பிட்டு ஃபிஃபா உலகக் கோப்பை பதிவிட்டுள்ளது.
உலக அளவில் கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகமிருக்கிறார்கள். இந்த முறை முதன்முதலாக 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா மீண்டும் மெஸ்ஸி தலைமையில் விளையாடவிருக்கின்றன.
Advertisement
Advertisement
கடைசி உலகக் கோப்பையில் 382 நாடுகள் பங்கேற்றன. ஃபிஃபா தரவரிசையின்படி கால்பந்துப் போட்டிகளை 211 நாடுகள் விளையாடுகின்றன. இருந்தும் இந்த உலகக் கோப்பையை 8 நாடுகள் மட்டுமே வென்றுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்த உலகக் கோப்பைகளை வென்ற 8 அணிகளும் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தது. இந்திய கால்பந்து அணி இதுவரை கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் - 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002)
ஜெர்மனி - 4 முறை (1954, 1974, 1990, 2014)
இத்தாலி - 4 முறை (1934, 1938, 1982 2006)
ஆர்ஜென்டீனா - 3 முறை (1978, 1986, 2022)
பிரான்ஸ் - 2 முறை (1998, 2018)
உருகுவே - 2 முறை (1930, 1950)
இங்கிலாந்து - 1 முறை (1966)
ஸ்பெயின் - 1 முறை (2010)
Football World Cup: Only 8 Nations Have Been Champions in Its 96-Year History!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.