புரோ லீக் ஹாக்கி: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
புரோ லீக் ஹாக்கி போட்டியின் லண்டன் லெக் ஆட்டங்களில் முதலில், இந்தியா - பாகிஸ்தானுடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) மோதுகிறது.
புரோ லீக் ஹாக்கி போட்டியின் லண்டன் லெக் ஆட்டங்களில் முதலில், இந்தியா - பாகிஸ்தானுடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) மோதுகிறது.
ராட்டா்டாம் லெக்கின் கடைசி ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியன் நெதா்லாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்தியா இந்த ஆட்டத்துக்கு வருகிறது. கடந்த 2024-இல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மோதிய பிறகு, இந்தியா - பாகிஸ்தான் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அந்த ஆட்டத்தில் இந்தியா 2-1 என வென்றது.
கடந்த 10 ஆண்டுகளில் இரு அணிகளும் 17 முறை மோதியிருக்க, இந்தியா தோல்வியே சந்திக்காமல் 15 வெற்றி, 2 டிராக்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
புரோ லீக் ஹாக்கி புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 8-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் கடைசியாக 9-ஆவது இடத்திலும் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.