34-0: உலக சாதனையுடன் 7ஆவது சீன ஓபன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!
சீன ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் குறித்து...

சீன ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். தனது 39ஆவது வயதில் ஏழாவது சீன ஓபனை வென்றுள்ளார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் செப்.28 முதல் தொடங்கி அக்.11 வரை நடைபெற இருக்கின்றன. இதில் ஆடவருக்கான போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 7-6 (7-3) என முதல் செட்டில் ஜோகோவிச் வென்றார். இரண்டாவது செட்டில் அலெக்ஸ் டி மினார் 1-0 என முதல் கேமில் முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக அவர் வெளியேறினார்.
இந்தக் காரணத்தினால் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ஏழாவது சீன ஓபன் பட்டமாகும். மொத்தமாக இது அவரது 102ஆவது பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன ஓபனில் ஜோவிச் 2009, 2010, 2012, 2013, 2014, 2015, மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் வென்று அசத்தியுள்ளார். மேலும் 34 போட்டிகளில் தோல்வியே காணாமல் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரஃபேல் நடால் 31-0 என வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தார். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
2009–2010: முதல் பத்து போட்டிகளில் வென்று 10-0 என தொடர்ச்சியாக இரு முறை பட்டங்களை வென்றார்.
2012–2015: தொடர்ச்சியாக நான்கு பட்டங்களை வென்று 29-0 என அசத்தினார்.
2026 ரீ-என்ட்ரி : 11 ஆண்டுகளுக்குப் பிறகு சீன ஓபனில் பங்கேற்ற ஜோகோவிச் தொடர்ச்சியாக வென்று 34-0 என சாதனை படைத்துள்ளார்.