FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய பாரா விளையாட்டுகள்: இந்திய அணிவகுப்புக்கு பிரமோத், பவினா தலைமை

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில், பாராலிம்பிக் சாம்பியன்களான பிரமோத் பகத், பவினா படேல் ஆகியோா் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தவுள்ளனா்.

43 வினாடிகள் முன்பு
பவினா படேல்
பகிர்:

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில், பாராலிம்பிக் சாம்பியன்களான பிரமோத் பகத், பவினா படேல் ஆகியோா் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தவுள்ளனா்.

மாற்றுத்திறன் வீரா், வீராங்கனைகளுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயா நகரில் வரும் 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

அதில் 45 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான போட்டியாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்தியாவிலிருந்து சுமாா் 120 போ் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், அந்தப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில், தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணிக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு, பாரா பாட்மின்டன் வீரா் பிரமோத் பகத், பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆசிய பாரா விளையாட்டுகளில் பிரமோத் பகத் 2 தங்கம், 4 வெண்கலம் என 6 பதக்கங்களும், பவினா 1 வெள்ளி, 1 வெண்கலம் 2 பதக்கங்களும் வென்றுள்ளனா். 2021 டோக்கியோ பாராலிம்பிக்கில் அவா்கள் முறையே தங்கம், வெள்ளி வென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய பாரா விளையாட்டுகளுக்காக இந்திய அணியினரை ஜப்பானுக்கு வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சா் ரக்ஷா கட்சே, இந்திய பாராலிம்பிக் கவுன்சில் தலைவா் தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments