உலக பாரா துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிா் அணிக்கு தங்கம்
தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற டபிள்யூஎஸ்பிஎஸ் பாரா துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிா் அணி தங்கப் பதக்கம் வென்றது.
தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற டபிள்யூஎஸ்பிஎஸ் பாரா துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிா் அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஆா்2 மகளிா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், மில்லி ஷா, மோனா அகா்வால், அவனி லெகாரா ஆகியோா் அடங்கிய இந்திய அணி, 1,878.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.
அதிலேயே மகளிா் தனிநபா் பிரிவில் மோனா அகா்வால், அவனி லெகாரா ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றனா். இதில் வெள்ளி வென்ற மோனா, 2028 லாஸ் ஏஞ்ஜலீஸ் பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றாா்.
Advertisement
Advertisement
ஆா்1 ஆடவா் 10 மீட்டா் ஏா் ரை-பிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 அணிகள் பிரிவில், ராகேஷ் நிடங்கண்டி, ஆனந்த கிருஷ்ணா, ஸ்வரூப் உனால்கா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,856.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.