FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தொடர் ஓட்டத்தில் 2 வெண்கலம்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 53-ஆக உயர்வு!

ஆசிய விளையாட்டில் தொடர் ஓட்டத்தில் இரண்டு வெண்கலம் வென்ற இந்திய அணிகள் குறித்து...

தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்திய அணியினர் - படங்கள்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
பகிர்:

ஆசிய விளையாட்டில் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிகள் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று குவித்துள்ளன. இத்துடன் தொடர் ஓட்டத்தில் மட்டுமே 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தொடர் ஓட்டத்தில் 4*400 மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இதனையடுத்து ஆடவர் 4*400 பிரிவில் வெண்கலமும் கலப்பு 4*100 தொடர் ஓட்டத்தில் வெண்கலமும் கிடைத்துள்ளன.

Advertisement

Advertisement

கலப்பு தொடர் ஓட்டத்தில் குரிந்தர்வீர் சிங், ஹரிதா பத்ரா, சினேகா சத்தியநாராயண ஷனுவல்லி மற்றும் அனிமேஷ் குஜூர் 41.06 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலம் வென்றார்கள்.

இந்தப் பிரிவில் சீன அணியினர் 40.78 விநாடிகளில் கடந்து தங்கமும் தாய்லாந்து அணியினர் 40.87 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றார்கள்.

ஆடவருக்கான 4*400 தொடர் ஓட்டத்தில் தர்மவீர் சௌத்ரி, மனு தெக்கினலில், ஜெய் குமார், விஷால் தென்னரசு ஆகியோர் பங்கேற்று 3 நிமிஷங்கள் 01.61 விநாடிகளில் ஓடி வெண்கலம் வென்றார்கள்.

இதே பிரிவில் ஜப்பான் அணியினர் 3 நிமிஷங்கள் 00.75 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார்கள். கத்தார் அணியினர் 3 நிமிஷங்கள் 00.93 நொடிகளில் கடந்து வெள்ளி வென்றார்கள்.

இத்துடன் இந்தியாவுக்கு 6 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கலம் உள்பட 53 பதக்கங்கள் கிடைத்துள்ளன. குத்துச் சண்டையில் இரண்டு இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

2 Bronze Medals in Relay Races: India's Medal Tally Rises to 53!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments