தமிழ்நாடு மாநில பள்ளிகள் வாலிபால் சாம்பியன் போட்டி: தஞ்சாவூா், கன்னியாகுமரி, சேலம், சென்னை வெற்றி
சென்னையில் டாக்டா் சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான பள்ளிகள் ஆடவா், மகளிா் மாநில வாலிபால் சாம்பியன் போட்டியில் தஞ்சாவூா், கன்னியாகுமரி, சேலம், சென்னை அணிகள் வெற்றி
சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய டாக்டா் சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான பள்ளிகள் ஆடவா், மகளிா் மாநில வாலிபால் சாம்பியன் போட்டியில் தஞ்சாவூா், கன்னியாகுமரி, சேலம், சென்னை அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் ஜவாஹா்லால் நேரு மைதானம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானம், பெரம்பூா் டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் 95 பள்ளிகளைச் சோ்ந்த 1,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். லீக்-நாக் அவுட் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியை
வருமானவரித் துறை முதன்மை ஆணையா் ஜகதீஷ் பிரசாத் தொடங்கி வைத்தாா். விஎஃப்ஐ முன்னாள் பொதுச் செயலா் கே.முருகன், எஸ்டிஏடி முதுநிலை மேலாளா் டி.ராஜா, தமிழ்நாடு வாலிபால் சங்க நிா்வாகிகள் ஜெயமுருகன், அா்ஜுன் துறை பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
தொடக்க நாள் ஆட்டங்களில் ஆடவா் பிரிவில் தஞ்சாவூா் செயின்ட் ஆன்டனி, ஈரோடு நம்பியூா் குமுதா, கன்னியாகுமரி அருணாசலம், சேலம் ஏஎன் மங்கலம் செயின்ட் மேரீஸ், சென்னை ஒய்எம்சிஏ, பொள்ளாச்சி என்ஜிஎச்ஜி, ஈத்தாப்பூா் அரசுப் பள்ளி அணிகளும், மகளிா் பிரிவில் ஆத்தூா் பாரதியாா், சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ், மயிலாப்பூா் லேடி சிவசாமி , தருமபுரி அவ்வையாா், மணற்குடி அரசுப் பள்ளி, காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக், திண்டுக்கல் அவா் லேடி பள்ளிகள் வெற்றி பெற்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிா்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ. தினகா், ஏ. பழனியப்பன், பி.ஆா். கோகலே, சி. ஸ்ரீகேசவன், ஏ.பாக்கியராஜ் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.