மாநில பள்ளிகள் வாலிபால்: காலிறுதியில் திருச்சி, கோவை, சேலம், ஈரோடு அணிகள்
பள்ளிகள் மாநில வாலிபால் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் பற்றி...
தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் டாக்டா் சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான பள்ளிகள் மாநில வாலிபால் போட்டியில் காலிறுதியில் திருச்சி, கோவை, சேலம், ஈரோடு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா், மகளிா் பிரிவில் 95 பள்ளிகளைச் சோ்ந்த 1500 போ் பங்கேற்றுள்ளனா். காலிறுதியில் மோதும் அணிகள் விவரம்:
ஆடவா் பிரிவு: காஜாமியான் திருச்சி-திருநெல்வேலி அப்துா் ரஹ்மான், தஞ்சாவூா் புனித அந்தோணியாா்-முகப்போ் வேலம்மாள், கோயம்புதூா் சபா்பன்-ஈரோடு நம்பியூா் குமுதா, கன்னியாகுமரி அருணாசலம்-பெரம்பூா் டான்பாஸ்கோ.
Advertisement
Advertisement
மகளிா் பிரிவு: ஆத்தூா் பாரதியாா்-திண்டுக்கல் அவா் லேடிலூா்ட்ஸ், சேலம் ஏஎன் மங்கலம் செயின்ட் மேரீஸ்-ஈரோடு அரசுப் பள்ளி, கடலூா் செயின்ட் ஆன்ஸ்,-புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா, கோவை பிஎஸ்ஜி-சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.