புதுகை அருகே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரியை சிறைபிடித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 3 பேர் கைது
புதுக்கோட்டை அருகே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தனியார் இரு சக்கர வாகன நிறுவனத்தின் விளம்பர பதாகைகளை ஏற்றி வந்த கர்நாடக மாநில லாரி கும்பகோணத்துக்கு புதுக்கோட்டை வழியாகச சென்றது. லாரியை ஆதிநாராயணன் என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் பிரகாஷ், பிரசன்னகுமார், பலராமன் ஆகிய 3 பேரும் உடனிருந்தனர்.
இந்த நிலையில் லாரி புதுக்கோட்டை தஞ்சை சாலையில் முள்ளூர் பகுதியில் வந்து கொண்டிருந்த லாரியை தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் கட்சியினர் லாரியை வழிமறித்து சிறை பிடித்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்ற சில வாகன ஓட்டிகள் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
Advertisement
Advertisement
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். பாலகுரு தலைமையில் போலீஸார் அங்கு சென்று லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்பட 3 பேரையும் கைது செய்து, புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதைப்போல கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரியையும் காவல் நிலையத்துக்குக்கொண்டு சென்று அனைவரிடமும் விசாரணை நடத்தியபிறகு, லாரியை போலீஸார் விடுவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.