தமிழ்நாடு

தில்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு அதிமுக மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன் தர்ணா!

DIN

புதுதில்லி: தனது காரை உள்ளே விட மறுத்ததால், தில்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் மைத்ரேயன். முன்பு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கியவர். தற்பொழுது கட்சியின் பிளவிற்கு பின்னர் அவர் பன்னீர்செல்வம் அணியில் இருந்து வருகிறார்.

அதிமுக அணிகள் பிளவுக்கு பின்னர், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளுமே தங்களுக்கு சாதகமாக ஆவணங்களை தொடர்ச்சியாக தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மைத்ரேயன் தனது காரில் வந்துள்ளார். ஆனால் அவரின் காரை உள்ளே அனுமதிக்க, அங்கிருந்த காவலர்கள் மறுத்து  விட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த மைத்ரேயன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் எதிரே நாற்காலி ஒன்றில் அமர்ந்து அவர் தற்பொழுதுதர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT