ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகங்களை அடுத்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது ஜெயலலிதாவோடு தொடர்புடைய பல்வேறு தரப்பினருக்கும் சம்மன்கள் அனுப்பி விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Advertisement
Advertisement
எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் ட்ரிக்கா மற்றும் நிதிஷ் நாயக் ஆகிய மூவரும் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதேசமயம் அப்பல்லோ மருத்துவர்களான அருள் செல்வன் மற்றும் ரவி குமார் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், பாஸ்கர் மற்றும் செந்தில் வேலன் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதியும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சுப்பையா ஆகஸ்ட் 24-ஆம் தேதியும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்களை அனுப்பியுள்ளது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.