நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தகிக்கும் தமிழிசை!
நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கோவை: நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதன்கிழமை அன்று கோவை வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இந்த மண் பெரியார் பிறந்த மண் என்று கூறுகிறார்கள். இந்த மண்ணில் பெரியார் பிறந்தது பெரிதா? அல்லது பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா?
Advertisement
Advertisement
ராமர் சிலை மற்றும் சீதை சிலையுடன் ரதம் ஒன்று தமிழகத்தில் வரக் கூடாதா? இந்துக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும்? ஆனால் ஒரு ரதம் வரக் கூடாதா?
எது திராவிட நாடு, எது தமிழ்நாடு என்பதில் ஸ்டாலினுக்கே சந்தேகம் உள்ளது.
இனி இந்து மத்ததை பற்றி பேச யாரும் பயப்பட வேண்டும். நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.