FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சட்டவிரோத சீன இறக்குமதி வெடிகளே ஈரோடு பட்டாசு விபத்துக்குக் காரணம்: பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஈரோட்டில் புதன்கிழமை நிகழ்ந்த பட்டாசு விபத்துக்கு சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாப் பாப்' வெடிகளே காரணம் என தமிழ்நாடு

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


ஈரோட்டில் புதன்கிழமை நிகழ்ந்த பட்டாசு விபத்துக்கு சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாப் பாப்' வெடிகளே காரணம் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி மற்றும் பொதுச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவகாசியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் அவர்கள் கூறியது:
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெங்காய வெடி என்ற பெயரில் ஒருவகை வெடி தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது. இதை தரையில் எறிந்தால் சிறிய தீப்பொறியுடன், சத்தத்துடன் வெடிக்கும். விலை மலிவு காரணமாக மாணவர்கள் அதிகளவில் அவற்றை வாங்கி வெடித்து வந்தனர். இந்த வெடியை மொத்தமாக ஒரு இடத்தில் சேமித்து வைத்து, அதில் விபத்து ஏற்பட்டால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு இவற்றுக்கு தடைவிதித்தது.
தற்போது இதுபோன்ற ஒருவகை சிறிய ரக வெடிகள் பாப் பாப்' என்ற பெயரில் காகித டப்பாக்களில் அடைக்கப்பட்டு சீனத்திலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய்ப்பட்டு விற்கப்படுகின்றன. இவ்வகை வெடிகள் சாதாரண அழகு சாதனப் பொருள்கள் விற்கும் கடைகளில்கூட ஒரு டப்பாவின் விலை சுமார் ரூ. 15 முதல் ரூ. 20 -க்கு கிடைக்கிறது. எனவே இவற்றை பள்ளி மாணவர்கள் வாங்கி அதன் ஆபத்து புரியாமல் வெடிக்கின்றனர். இவ்வகை வெடிகள் பட்டாசு கடைகளில் விற்பதில்லை. இவற்றில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள வெடி மருந்து ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப் பெட்டிகளின் உறையில் இவை பட்டாசு இல்லை என சிறியதாக எழுதப்பட்டிருக்கும். இவை இணையதளம் மூலம் வெளிப்படையாக விற்கப்படுகிறது. இவற்றை வாங்க இணையதளத்தில் ஆர்டர் செய்தால் விமானம் மூலம் கூட இவை அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 11ஆம் தேதி அரசுக்கு கடிதம் எழுதினோம். இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி ஈரோட்டில் இந்த வெடியால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர். பின்னர் சீன வெடி டப்பாக்களை அவர்கள் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments