FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஜினியுடன் தமாகா இணைந்து செயல்படுமா?: வாசன் பதில்

ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து அவர் கட்சி தொடங்கிய பிறகே கூற முடியும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். இதுதொடர்பாக

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து அவர் கட்சி தொடங்கிய பிறகே கூற முடியும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். இதுதொடர்பாக அவர், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை' என்று அமைச்சர் தங்கமணி கூறுகிறார். ஆனால், நான் சுற்றுப்பயணம் செய்யும்போது பல மாவட்டங்களில் மின்வெட்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.
பசுமை வழிச் சாலைத் திட்டத்தை 6 வழிச் சாலையாக மாற்றுவதற்கான ஆலோசனைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது. முழு ஆய்வையும் மேற்கொண்டு, மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகே திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. தமிழக அரசும் இதுகுறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பல மாநிலங்களில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் வரியை குறைக்க முன் வரவேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.
ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அவர் கட்சி தொடங்கிய பிறகுதான் இதுகுறித்து கூற முடியும் என்றார் வாசன்.
முன்னதாக, அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களின் பார்வை' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டதற்காக, தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா, ஜி.கே.வாசனிடம் வாழ்த்துப் பெற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments