FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரௌடித்தனம்: திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

ரௌடித்தனம் செய்யும் திமுகவினர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


ரௌடித்தனம் செய்யும் திமுகவினர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், திமுகவுக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்னைகள், விருப்பு, வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை திமுக அனுமதிக்காது. 
தனிநபரைவிட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரௌடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும், திமுக விதிகளின்படி அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments