மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை குறைந்ததன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 26,440 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை வினாடிக்கு 21,027 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க | ‘கோவேக்ஸின் செலுத்தியவா்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கிடையாது’
Advertisement
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் 20,000 கன அடியாக உள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 91.88 டி.எம்.சி. ஆக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுவதால் புதன்கிழமை இரண்டாவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக நீடித்து வருகிறது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் மேட்டூர் அணை 120 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.