முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,604 பேருக்கு கரோனா; 25 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 25 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 23 ஆகஸ்ட் 2021, 7:43 pm IST
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 25 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 1,630 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 1,604-ஆக குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை (ஆக. 23) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

Advertisement

புதிதாக 1,604 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,02,489-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 25 பேர் பலியாகியுள்ளனர். இது வரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,734-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,48,868-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் ஏராளமானோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 195 பேரும், சென்னையில் 172 பேரும், ஈரோட்டில் 143 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments