சிறுபான்மை மக்களுக்கான அரசு திமுக: கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சிறுபான்மை மக்களுக்கான அரசாக திமுக என்றுமே இருக்கும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கான அரசாக திமுக என்றுமே இருக்கும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் ஏற்றமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
Advertisement
Advertisement
அப்போது பேசிய அவர், வழிபாடு என்பது தனிநபர் விருப்பம். நான் அனைவரும் மொழியாலும் இனத்தாலும் தமிழர்கள் என்ற புள்ளியில் இணைகிறோம்.
இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு நெருக்கமான விழாவாக உள்ளது. அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அரசு மட்டுமே மக்களுக்கான அனைத்தையும் வழங்கிவிட முடியாது. இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை. திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 300-க்கும் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.