FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், பொருள்களை வாங்கச் செல்வோர் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

6 பிப்ரவரி 2024, 6:14 pm IST
நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை
பகிர்:


சென்னை: தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், பொருள்களை வாங்கச் செல்வோர் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்து பொருள்களை வாங்கும் நடைமுறையும், புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை அச்சிடும் பணியும் நாளை தொடங்குகிறது.

இது குறித்து தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவில், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000/- இரு தவணைகளில் ரூ.2000/- வீதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்க உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும் ஜூன் 21 மாதத்தில் நிவாரணத் தொகை ரூ.2000/-உடன் 14 மளிகைப் பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதனைப் பெற நியாய விலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிமேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், 01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments