FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் கீழத்தெரு ஶ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்! நாளை தீமிதி உற்சவம்

சிதம்பரம் கீழத்தெரு ஶ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

Updated On : 31 ஜூலை 2022, 1:55 pm IST
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பகிர்:

சிதம்பரம் கீழத்தெரு ஶ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஶ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஜூலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. தேர், கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. முன்னதாக நடராஜர் கோயிலிருந்து பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேர் புறப்பட்டது. பின்னர் மாலை ஶ்ரீமாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோயிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

நாளை தீமிதி உற்சவம்:  ஆக.1-ம் தேதி நாளை திங்கள்கிழமை காலை 5 மணி முதல் அங்கபிரதட்சிணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. ஆக.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும்,  ஆக.2-ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்  குழு வி.பிரேமா வீராசாமி,  என்.கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்துள்ளனர்.  

Advertisement

Advertisement

இன்று போக்குவரத்து மாற்றம்: தீமிதி உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments