FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை...   1 மணி நேரம் போராடி குழந்தை மீட்பு!

குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரமாக போராடி பாத்திரத்தை லாவகமாக வெட்டி எடுத்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். 

Updated On : 9 அக்டோபர் 2022, 10:45 am IST
குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை லாவகமாக வெட்டி எடுக்கும் மருத்துவர்கள்
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரமாக போராடி பாத்திரத்தை லாவகமாக வெட்டி எடுத்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே விசாலாட்சி தெருவை சேர்ந்தவர் ஜோனா(30). தனியார் தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஜோவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக சாப்பாடு வைக்க பயன்படும் பாத்திரம்(குண்டான்) ஜோவின் தலையில் சிக்கியுள்ளது. 

இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு லாவகமாக தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தையை காப்பாற்றினர். ஒன்றரை வயது குழந்தை விளையாடும்போது தலையில் பாத்திரம் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments