FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 4 கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள 4 கிராம மக்கள், தங்கள் உடமைகளுடன் தண்ணீரைக் கடந்தும் படகுகள் மூலமும் வெளியேறி வருகின்றனர். 

Updated On : 18 அக்டோபர் 2022, 3:12 pm IST
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமத்தை விட்டு வெளியேறும் மக்கள். 
பகிர்:

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள 4 கிராம மக்கள், தங்கள் உடமைகளுடன் தண்ணீரைக் கடந்தும் படகுகள் மூலமும் வெளியேறி வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் படிப்படியாக உயர்ந்து கிராமங்களில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து வருவதால் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர்.

மேலும் கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ள நீர் செல்வதால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது‌. இதனால் வெள்ள நீரைக் கடந்தும் படகுகள் மூலமும் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் மற்றும் அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர். மேலும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் கூடுதல் படகுகள் மூலம் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments