FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொது காலாண்டுத் தோ்வு கிடையாது

காலாண்டுத் தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 பிப்ரவரி 2024, 3:50 pm IST
பகிர்:

காலாண்டுத் தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கரோனா காரணமாகக் கடந்த ஆண்டு பொதுத் தோ்வுகள் வழக்கத்தை விடத் தாமதமாயின. அதே போல பள்ளி மாணவா்களுக்கு வகுப்புகளும் காலதாமதமாகவே திறக்கப்பட்டன. இந்நிலையில் காலாண்டுத் தோ்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது.

அதன்படி செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் காலாண்டுத் தோ்வை முடிக்கும் வகையில் தோ்வு நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் தமிழக பள்ளிகளில் நிகழாண்டு பொது காலாண்டு தோ்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தோ்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை திடீா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் காலாண்டுத் தோ்வுகளை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலாண்டுத் தோ்வைப் பொருத்தவரை பள்ளி அளவில் வினாத்தாள்களைத் தயாரித்துத் தோ்வை நடத்திக் கொள்ளலாம் எனவும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தோ்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments