FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 23 ஏப்ரல் 2022, 10:53 am IST
பகிர்:

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கரோனா பரிசோதனைகளும் தடுப்பூசி இயக்கங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை ஐஐடி நிறுவனத்தில் ஏற்கெனவே 30 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும்  25 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் முறையாக அங்கு கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments