எடப்பாடி பகுதியில் திடீர் கனமழை: நெல், வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம்
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று (வியாழன்) இரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேந்தமடைந்தன.
எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று (வியாழன்) இரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
கடந்த சில நாள்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிவு ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தனர்.
திடீரென பெய்த கனமழையில் சேதமடைந்துள்ள பருத்தி வயல்கள்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | அக்.12க்குள் 5ஜி சேவை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
திடீர் கனமழையால் எடப்பாடி அடுத்த காவிரி வடிநிலப் பகுதிகளான மோளப்பாறை, ஓடைக்காட்டூர் மற்றும் நெடுங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. அப்பகுதி வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான மானாவாரி நிலங்களில் தற்போது நிலக்கடலை பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில், பூ பிடிக்கும் தருவாயில் உள்ள நிலக்கடலை பயிர்களுக்கு திடீர் மழை சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.