FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,184-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து ஒரு வாரமாக 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 8 டிசம்பர் 2022, 10:27 am IST
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,184-க்கு விற்பனை!
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து ஒரு வாரமாக 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் 40 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், டிச.8-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.56 உயர்ந்து, ரூ.40.184-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.5023 ஆக விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.71,300-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.71.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

வியாழக்கிழமை நிலவரப்படி

தங்கம் கிராம் - ரூ.5,023

தங்கம் ஒரு சவரன் - ரூ.40,184 

வெள்ளி கிராம் - 71.30

ஒரு கிலோ வெள்ளி - ரூ.71,300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments