FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொதுக்குழு தீர்மானங்கள்: இறுதிக்கட்ட ஆலோசனையில் ஓபிஎஸ் பங்கேற்பு! இபிஎஸ்?

வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

Updated On : 18 ஜூன் 2022, 12:27 pm IST
கோப்புப்படம்
பகிர்:

வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்னையன், செம்மலை, மனோஜ் பாண்டியன், வளர்மதி, ஜெயக்குமார் என 11 பேர் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். 

Advertisement

Advertisement

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் கலந்துகொள்ளவிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அதிமுக அலுவலகம் வரவில்லை. 

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரியவரும். 

'ஒற்றைத் தலைமை' தீர்மானத்திற்கு இபிஎஸ் தரப்பு ஆதரவும் ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments