அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு அளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு அளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
'கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருப்பதால் போக்குவரத்து சீரமைப்பு, காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்தும் அதுகுறித்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும், கூட்டத்திற்கு ஓரிரு தினங்களே இருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாளை மறுநாள்(ஜூன் 22) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ‘அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்’
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.