FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அந்தமான் அருகே உருவாகிறது 'அசானி' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

Updated On : 20 மார்ச் 2022, 10:14 pm IST
அந்தமான் அருகே உருவாகிறது 'அசானி' புயல்
பகிர்:

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

நிகோபர் தீவுகளுக்கு 200 கிலோ மீட்டர் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலும், அந்தமான் தீவுகளுக்கு 100 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். அதற்கடுத்த 12 மணிநேரத்தில் புயலாகவும் மாறவாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு 'அசானி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனால், அந்தமான் கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

நடுக்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் விமானம், கப்பல்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக கரை திரும்ப அறிவுரை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments