தமிழகத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- தீவிரமடையும் காலநிலை மாற்றம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்னாப்பிரிக்கா
Advertisement
இதனால் மொத்த பாதிப்பு 34,54,556-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,107-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 16,524 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 424 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.