FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: இளைஞர் தப்பியோட்டம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பிடியோடிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On : 13 அக்டோபர் 2022, 5:53 pm IST
மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை
பகிர்:

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பிடியோடிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்தியா என்ற 20 வயது பெண் ரயில் முன் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தில், சத்தியாவை ரயில் முன் தள்ளிவிட்டதாக சதீஷ் என்ற இளைஞரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (22). அதேப் பகுதியைச் சேர்ந்த சத்தியா (20) இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சத்தியா

வழக்கம் போல இருவரும் இன்று பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்தியாவை, சதீஷ் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சத்தியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சத்தியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், தந்தை தனியார் நிறுவன ஊழியர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

ஏற்கனவே, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ரயில் நிலையத்தில் மற்றொரு கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments