கோவை கார் வெடிப்பு: நாகையை சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது வீடுகளில் காவல்துறை சோதனை
நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சதேகத்திற்குறிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் தமிழக காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலுவையில் உள்ள அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான 10 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இருவரது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் சுமார் ஒருமணிநேரம் நடந்த ஆய்வு மற்றும் விசாரணையை முடித்துவிட்டு காவல்துறையினர் புறப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.