'தின்பண்டம் தர முடியாது' - சங்கரன்கோவில் அருகே தீண்டாமை அவலம்! பரவும் விடியோ
சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை அவலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை அவலம் என பரவும் விடியோ குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது எனக் கூறும் ஒரு விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடியோவில், பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றனர். அப்போது கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது என்றும் வீட்டில் சென்று இதனைச் சொல்லுமாறும் கூறுகிறார்.
Advertisement
Advertisement
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த விடியோ குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுப்பு: கடைக்கு சீல்; இருவர் கைது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.