இன்றைய தக்காளி விலை நிலவரம்!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலையின் மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விளைவாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். தமிழக அரசு தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியாயவிலைக் கடைகள், 67 பண்னை பசுமைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆக.2-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் இன்று(ஆக.6) ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.