FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குறையும் தக்காளி விலை!

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்த நிலையில் தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

6 பிப்ரவரி 2024, 6:36 pm IST
பகிர்:

தமிழ்நாட்டில் தக்காளி விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதனிடையே, தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தமிழக அரசு , நியாயவிலைக் கடைகள் மற்றும் 67 பண்ணை பசுமைக் கடைகள் மூலமாக குறைவான விலைக்கு(கிலோ ரூ. 60) தக்காளி விற்பனை செய்து வருகிறது. 

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆக.2-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் ரூ. 120க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ. 100 ஆகக் குறைந்த நிலையில் இன்றும் முதல் ரகம் ஒரு கிலோ ரூ. 100-க்கும் மேலும் தரத்திற்கேற்ப ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையாகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில்ரூ.60- க்கும் பழனி மார்க்கெட்டில் ரூ.40-க்கும் விற்கப்படுகிறது.

வேலூரில் சில பகுதிகளில் ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்பனை ஆகிறது. 

மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

சில்லறை விற்பனைக் கடைகளில் சந்தை விலையைவிட சற்று அதிகமாக விற்கப்படுகிறது. 

தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அடுத்த வாரத்தில் தக்காளி விலை மேலும் குறையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments