FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

த்ரிஷா மீது வழக்கு: மன்சூா் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

த்ரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் மீது மானநஷ்ட ஈடு வழக்க தொடர அனுமதி கோரிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 22 டிசம்பர் 2023, 2:01 pm IST
பகிர்:

சென்னை: த்ரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் மீது மானநஷ்ட ஈடு வழக்க தொடர அனுமதி கோரிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக, நடிகா் மன்சூா் அலிகானுக்கு, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகா் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிா்ப்பைத் தெரிவித்திருந்தனா். நடிகா் சங்கமும் மன்னிப்புக் கேட்கும்படி, மன்சூா் அலிகானை வலியுறுத்தியது.

இந்த நிலையில், தேசிய மகளிா் ஆணையத்தின் பரிந்துரைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், நடிகா் மன்சூா் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மன்சூா் அலிகான் மன்னிப்புக் கோரினாா். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து முழு காணொலியையும் பாா்க்காமல், தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம்சாட்டி, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கேட்டு, நடிகா் மன்சூா் அலிகான் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமாா், இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாதானே வழக்கு தொடா்ந்திருக்க வேண்டும்? கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகவா நிபந்தனையாற்ற மன்னிப்புக் கோரினாா்? எனவும் கேள்வியெழுப்பினாா்.

இதையடுத்து, மன்சூா் அலிகானின் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகா் சிரஞ்சீவி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிச.22-ஆம் தேதிக்குத் ஒத்தி வைத்தாா்.

இந்த நிலையில், மன்சூர் அலிகானின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பெண்களுக்கு எதிரான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments