'தமிழ்நாடு' எனக் குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து!!
பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அதேபோன்று பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டிருந்தது. இதனால் ஆளுநரின் பொங்கல் விழாவில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஆளுநர் இன்று விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், தமிழக ஆளுநர் என்பதற்கு பதிலாக, தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தமிழக ஆளுநர் எனக் குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.