மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
தொடர்ந்து 2-வது நாளாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து 2-வது நாளாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.
இதில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, செயல்படுத்தும் அரசுத் திட்டங்களின் நிலை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் தனிநபர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.