FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

19 August 2024, 9:51 am IST
முதல்வர் ஸ்டாலின்-ராஜ்நாத் சிங்.
பகிர்:

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கருணாநிதிக்குப் பாராட்டு மழை பொழிந்தீர்கள், கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்திய தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழாவில், மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட, முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா். தொடர்ந்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: மாநில எல்லையைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தியவா் கருணாநிதி. சமூக நீதியின் காவலராகத் திகழ்ந்த அவரின், மக்கள் நலன்சாா்ந்த பங்களிப்பால் தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே பயன்பெற்றது என்றார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments