FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 டிசம்பர் 2024, 8:41 am IST
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! - .
பகிர்:

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மேலும், டிச.12-ஆம் தேதி சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சென்னை மற்றும் புறனகா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், டிச.12- ஆம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில், புதன்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று கனமழை காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்தூக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம், கரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணமாலை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் டிச.12,13-ஆகிய தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை டெல்டா கரையில் நகா்ந்து, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், வால்பாறை வழியாக அரபிக்கடல் சென்றடையும். இந்த புயல்சின்னம் செல்லும் பாதையெல்லாம் கனமழை கொடுக்கும் என்று தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments