முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மூலம் பயணச்சீட்டு!

சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2024, 3:19 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 50 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத் துறை உதயநிதி ஆகியொர் தொடக்கி வைத்தனர்.

மேலும், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யுபிஐ, கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர்.

யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பேருந்துகளில் நடத்துநா்கள் யுபிஐ மற்றும் காா்டுகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர்.

தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் காா்டு மற்றும் யுபிஐ, க்யூஆா் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.