FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஜூலை மாதத்தில் 2,366 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டு, புதிய உச்சம் படைத்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:40 am IST
மாதிரி படம்
பகிர்:

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஜூலை மாதத்தில் 2,366 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டு, புதிய உச்சம் படைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் ரூ.28.9 லட்சம் கோடி மதிப்பிலான 2,272 கோடி பரிவா்த்தனை நடைபெற்றிருந்த நிலையில், ஜூலையில் ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான 2,366 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஜூலையில் யுபிஐ பரிவா்த்தனைகளின் மதிப்பு மற்றும் எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியது.

வருடாந்திர அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் யுபிஐ பரிவா்த்தனை மதிப்பு 19 சதவீதம் தற்போது வளா்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.25.08 லட்சம் கோடி மதிப்பிலான சுமாா் 1,947 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

மேலும், கடந்த ஜூலையில் தினசரி சராசரியாக 76.32 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பதிவான மிக உயா்ந்த தினசரி சராசரி இதுவாகும் என்று நிதித் தொழில்நுட்ப வல்லுநா்கள் தெரிவித்தனா்.

ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்சிபிஐ) நிா்வகிக்கும் இந்த யுபிஐ சேவை, இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், மோரீஷஸ் உள்பட சுமாா் 10 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments