தமிழகத்தில் மழை நீடிக்குமா? பாலச்சந்திரன் விளக்கம்!
தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத் தெண்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத் தெண்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மழை நிலவரம் குறித்து பாலச்சந்திரன் கூறுகையில்,
தமிழகத்தைப் பொருத்தவரை ஜனவரி 13-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
இன்று திருவாரூர், நாகை, மயிலை உள்பட 7 மாவட்டங்களில் மிகக் கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுவை, நாகப்பட்டினம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் ஜனவரியில் இதுவரை இல்லாத அளவு மழைப் பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் இயல்பை விட இந்தாண்டு 4 சதவீதம் அதிகளவில் மழைப் பதிவாகியுள்ளது.
சென்னையில் ஒருசில இடங்களில் மேகம் திடீரென உருவாகி விட்டுவிட்டு மழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.