ரூ. 2000 கோடி பங்கு பிணைய பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு
ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ. 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 8 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூன் 11, 2024 அன்று நடத்தப்படும்.
போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜூன் 11, 2024 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.