FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புயல் எதிரொலி; பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 நவம்பர் 2024, 7:53 pm IST
- படம் | பிடிஐ
பகிர்:

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.புயல் கரையைக் கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை பெய்யும். விழுப்பும், கடலூர், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.

Advertisement

Advertisement

புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் தரைக்காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களிலும் தரைக்காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், கட்டுமானத் தளங்களில் உள்ள உயர் கிரேன்கள், விளம்பர பதாகைகளை பாதுகாப்பாக கீழே இறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் உள்ள பூங்காக்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments