FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: 2.67 கி.மீ. சுரங்கப்பாதை பணி நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் மொத்தம் 2.67 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிர்:

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் மொத்தம் 2.67 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூா் வரை சுமாா் 47 கி.மீ. தொலைவுக்கு 5-ஆம் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக ‘குறிஞ்சி’, ‘முல்லை’, ‘மருதம்’, ‘நெய்தல்’ ஆகிய 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதில், ‘மருதம்’ இயந்திரம் மூலமாக வில்லிவாக்கம் ரயில்வே நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை மொத்தம் 601 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி கடந்த ஏப். 24-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், ‘மருதம்’ இயந்திரம் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள 5 ரயில்வே தண்டவாளங்களுக்கு அடியிலும், குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த பகுதியிலும் பாதுகாப்பாகச் சுரங்கம் தோண்டி வில்லிவாக்கம் பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை வெற்றிகரமாக வந்தடைந்தது.

இதன் மூலம் 5-ஆவது வழித்தடத்தில் மொத்தம் 2.67 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

சுரங்கப் பணி நிறைவு நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமைப் பொது மேலாளா்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியேசா் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), எஸ்.அசோக்குமாா் (வழித்தடம் மற்றும் உயா்நிலை கட்டுமானம்) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments