FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதலீட்டாளர்கள் மாநாடு: ஒப்பந்தங்களை செயல்படுத்த சிறப்புக் குழு!

தமிழ்நாட்டில் 2 நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

Updated On : 8 ஜனவரி 2024, 6:29 pm IST
பகிர்:

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பல்வேறு அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2 நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல தொழிற்சாலைகளை திறந்துவைத்து, பல தொழிற்சாலைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,  புத்தாக்க தொழில் (ஸ்டார்ட் அப்) துறையில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதியில் தமிழகத்தின் போட்டியிடும் திறன் அதிகரிக்கும்.

தமிழகத்துக்கு கிடைத்துள்ள முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்க காவிரி மருத்துவமனை ரூ.1200 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.100 கோடியில் புரிந்துணர்வுஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். 

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மூலம் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். தூத்துக்குடியில் ரூ.36,238 கோடியில் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

பெறப்பட்ட புதிய முதலீடுகள் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments