சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி!
சேலத்துக்கு வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம்: சேலத்துக்கு வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அப்போது பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய இந்திய மாணவர் சங்கத்தினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு சாலை வழியாக சேலத்திலிருந்து கோவைக்கு ஆளுநர் செல்லவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.